/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவை கே.எம்.சி.ஹெச்., சார்பில் 21ல் இலவச புற்றுநோய் பரிசோதனை
/
கோவை கே.எம்.சி.ஹெச்., சார்பில் 21ல் இலவச புற்றுநோய் பரிசோதனை
கோவை கே.எம்.சி.ஹெச்., சார்பில் 21ல் இலவச புற்றுநோய் பரிசோதனை
கோவை கே.எம்.சி.ஹெச்., சார்பில் 21ல் இலவச புற்றுநோய் பரிசோதனை
ADDED : டிச 19, 2025 08:02 AM
சங்ககிரி: கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரியில், பஸ் பணிமனை எதிரே உள்ள, ஸ்ரீவாசுதேவ் மஹாலில், வரும், 21 காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடக்க உள்ளது. இதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனை(பாப்ஸ்மியர்), மார்பக பரிசோதனை(மேமோகிராம்) ஆகியவை, மருத்துவரின் பரிந்துரைப்படி இலவசமாக செய்யப்படும்.
மார்பகத்தில் கட்டி, வலி, நாள்பட்ட மாதவிடாய் தொந்தரவு, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்(மலச்சிக்கல்/வயிற்றுப்போக்கு), மலத்தில் ரத்தம், பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது வலி, கல்லீரல், கணைய புற்றுநோய், அடிவயிற்றில் கட்டி, குரலில் மாற்றம், எடை குறைவு, ஆறாத வாய்ப்புண், கழுத்தில் வீக்கம்/கட்டி போன்ற பிரச்னை உள்ளவர்கள், முகாமில் பங்கேற்கலாம்.
மேலும் இதில் பங்கேற்போருக்கு, மருத்துவர் பரிந்துரைக்கப்படும் இதர பரிசோதனைகள், சிகிச்சைகள், கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். இந்த இலவச மருத்துவ ஆலோசனை முகாமுக்கு வரும்போது, பழைய மருத்துவ பதிவுகள், எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்து சீட்டுகளை எடுத்து வர வேண்டும். விபரம் பெற, 7418887411 என்ற எண்ணில் அழைக்கலாம்.

