/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடு வியாபாரி உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
ஆடு வியாபாரி உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : டிச 19, 2025 08:02 AM
சேலம்: சேலம், நாகம்மாள் தோட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரை கடந்த நவ., 21ல், கத்திமுனையில் மிரட்டி, 80,500 ரூபாயை, 2 பேர் பறித்துச்சென்றனர். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, மேட்டூர், தண்ணீர் குட்டப்பட்டியை சேர்ந்த கவுதம், 37, தர்மபுரி மாவட்டம், கொலகத்துாரை சேர்ந்த மணிகண்டன், 36 ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இருவர் மீதும், பல்வேறு வழிப்பறி, அடிதடி குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. இதனால் இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார்.
ஆடு வியாபாரி
அதேபோல் மேச்சேரி, எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆடு வியாபாரி மயில்சாமி, 38. இவர், மாமனாரை கொன்ற வழக்கில் தீவட்டிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே, 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 'போக்சோ' சட்டத்தில், மேட்டூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதால், அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.

