/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 10 முதல் வகுப்பு ஆரம்பம்
/
போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 10 முதல் வகுப்பு ஆரம்பம்
போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 10 முதல் வகுப்பு ஆரம்பம்
போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 10 முதல் வகுப்பு ஆரம்பம்
ADDED : டிச 07, 2024 07:06 AM
ஓமலுார்: போட்டித்தேர்வுக்கு பெரியார் பல்கலையில் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 10ல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெக-நாதன் அறிக்கை:பெரியார் பல்கலையில் குடிமையியல் பணி தேர்வு பயிற்சி, வழி-காட்டுதல் மையம், சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் இணைந்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4 உள்ளிட்ட இதர போட்டித்தேர்வுக்கு, 4 மாத இலவச பயிற்சி வகுப்பை வரும், 10ல் தொடங்க உள்ளது.இதில் பல்கலை மாணவர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
தேர்வு குறிப்பு, மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்-படும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். திங்கள் முதல்
வெள்ளி வரை, காலை, 10:00 - 1:00, 2:00 -4:00 மணி வரை, வகுப்புகள் நடக்கும். சனி காலை, 10:00 - 5:00 மணி வரை,
ஞாயிறு காலை, 10-:00 - 1:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கும்.பெரியார் பல்கலை நுாலக மாடியில் உள்ள குடிமையியல் தேர்வு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையத்தில், பெயர்களை
பதிவு செய்து பயன்பெறலாம். விபரங்களுக்கு, 9789319722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.