/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இலவசமாக பெட்ரோல்
/
ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இலவசமாக பெட்ரோல்
ADDED : ஏப் 25, 2025 01:39 AM
தர்மபுரி:
தர்மபுரி நான்கு ரோட்டில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் மரக்கன்றை மாவட்ட கலெக்டர் சதீஷ் நேற்று வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட போலீசார், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, பைக்கில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் தலைக்கவசம் அணிந்து வந்த, வாகன ஓட்டிகளுக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் பெறுவதற்கான டோக்கன் மற்றும் மரக்கன்று வழங்கினார். இதில், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், டிராபிக் எஸ்.ஐ., சரவணன் உட்பட போலீசார் தன்னார்வலர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.