/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏப்.,25 முதல் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி வகுப்பு
/
ஏப்.,25 முதல் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி வகுப்பு
ஏப்.,25 முதல் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி வகுப்பு
ஏப்.,25 முதல் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 22, 2025 01:11 AM
சேலம்:மாவட்ட அளவிலான கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி வகுப்பு வரும், 25ல் துவங்குகிறது.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சேலம்
மையம் சார்பில் நடப்பாண்டுக்கான கோடைகால விளைாட்டு பயிற்சி வகுப்பு ஏப்.,25ல் துவங்கி மே, 15 வரை, 21 நாட்கள் காலை 6:00 முதல் 8:00 மணி வரையும், மாலை 4:30 முதல் 6:30 மணி
வரையும் பயிற்சி அளிக்கப்படும்.தடகளம், கால்பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, குத்துச்சண்டை விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதில், 18
வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். கட்டணம் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் வரும், 25 காலை 6:00 மணிக்கு மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்துக்கு, தங்கள்
ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.