/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எழுத்தர், உதவியாளர் பணிக்கு நாளை முதல் இலவச பயிற்சி
/
எழுத்தர், உதவியாளர் பணிக்கு நாளை முதல் இலவச பயிற்சி
எழுத்தர், உதவியாளர் பணிக்கு நாளை முதல் இலவச பயிற்சி
எழுத்தர், உதவியாளர் பணிக்கு நாளை முதல் இலவச பயிற்சி
ADDED : ஆக 20, 2025 01:31 AM
சேலம், கூட்டுறவு சங்க எழுத்தர், உதவியாளர் பணி தேர்வுக்கு, நாளை முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் எழுத்தர், உதவியாளர் என, 148 பணியிடங்கள் காலியாக உள்ளது. நேரடி நியமனம் செய்து பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வுக்கு, https://www.drbslm.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, வரும், 29 வரை அவகாசம் உள்ளது.
இந்நிலையில் எழுத்து தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல், சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம். விபரங்களுக்கு, 0427 - 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.