/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுதானிய உணவு தயாரிப்பு பெண்களுக்கு இலவச பயிற்சி
/
சிறுதானிய உணவு தயாரிப்பு பெண்களுக்கு இலவச பயிற்சி
ADDED : நவ 08, 2025 05:12 AM
சேலம்:சேலம் மாவட்ட பெண்களுக்கு, சிறுதானிய உணவு தயாரிப்பு குறித்து ஒரு மாத இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குனர்
ஜெய்சங்கர் அறிக்கை: சர்வதேச தொழில் முனைவோர் வாரத்தை முன்னிட்டு,
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில்,
விழிப்புணர்வு முகாம், பயிற்சி நடத்தப்பட உள்ளன. சேலம் மாவட்ட
பெண்களுக்கு, சிறுதானியத்தில் இருந்து, கேக், பிஸ்கட், லட்டு,
பல்வேறு பொடி வகைகள், கம்பு ரவை, காய், பழங்கள் பதப்படுத்தல்
உள்ளிட்டவை குறித்து, ஒரு மாதம், இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள், 88258 12528 என்ற எண்ணில் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
பல்வேறு தொழில் வாய்ப்புகள், புது தொழில்
தொடங்க கடன்கள், மத்திய மாநில அரசு மானிய திட்டங்கள், தொழில் தொடங்க
தேவையான விபரங்கள், ஏற்றுமதி வாணிபம் உள்ளிட்டவை குறித்து, வரும்,
11ல், அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரியில், விழிப்புணர்வு
நடத்தப்படுகிறது.

