/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளி மாணவியர் மாநில போட்டிக்கு தேர்வு
/
அரசு பள்ளி மாணவியர் மாநில போட்டிக்கு தேர்வு
ADDED : நவ 08, 2025 05:12 AM
கெங்கவல்லி:கெங்கவல்லி
அருகே தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், நடப்பு
கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட
கலைத்திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தேர்வு
பெற்றனர்.
சாதனை படைத்த மாணவியரான, இலக்கிய
நாடகத்தில்(சிலப்பதிகாரம்) சுகந்தி, மகேஸ்வரி, திவ்யஸ்ரீ, ராகவி,
சுஜிபாலா; வீதி நாடக போட்டியில்(பசுமையும் பாரம்பரியமும்) தர்ஷினி,
யாசிகா, ஜிந்துசா, பூஜாமலர், தரணிகா, துர்காதேவி ஆகியோரை, நேற்று
பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் குருநாதன், உதவி தலைமை ஆசிரியர்கள்
ஜெயபால், ரவிசங்கர், பள்ளி மேலாண் குழுவினர், பி.டி.ஏ., நிர்வாகிகள்
பாராட்டி, பரிசு வழங்கினர்.

