/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது, அரிசி கடைகளில் திருடிய முகமூடி கும்பலுக்கு வலை
/
மது, அரிசி கடைகளில் திருடிய முகமூடி கும்பலுக்கு வலை
மது, அரிசி கடைகளில் திருடிய முகமூடி கும்பலுக்கு வலை
மது, அரிசி கடைகளில் திருடிய முகமூடி கும்பலுக்கு வலை
ADDED : நவ 08, 2025 05:11 AM
மேட்டூர்:மேச்சேரி,
பொட்டனேரி ஆடு ஆராய்ச்சி மையம் எதிரே உள்ள கட்டடத்தில் அரிசி கடை,
அசைவ ஓட்டல் உள்ளன. நேற்று அதிகாலை, அங்கு காரில் வந்த, 3 பேர், அரிசி
கடை பூட்டை உடைத்து, 3 மூட்டை அரிசி, 2 கேன் எண்ணெயை திருடினர்.
தொடர்ந்து ஓட்டலில் புகுந்து, 200 ரூபாயை திருடினர். பின் பொட்டனேரி
பஸ் ஸ்டாப் அருகே உள்ள மளிகை கடை பூட்டை உடைக்க முயன்று, முடியாததால்
அங்கிருந்து புறப்பட்டனர். மேலும் மேட்டூர் ஆர்.எஸ்., சென்று, 'குமரன்
என்டர்பிரைசஸ்' கடையிலும் பூட்டை உடைக்க முயன்று, முடியாததால்
ஏமாற்றம் அடைந்தனர்.
அடுத்து ஆர்.எஸ்., டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து,
ஒருவர் மட்டும் அடியில் புகுந்து, 11,500 ரூபாய் மதிப்பில்
மதுபாட்டில்களை திருடிக்கொண்டு காரில் ஏற்றிச்சென்றனர்.
மேச்சேரி
மற்றும் கருமலைக்கூடல் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு
செய்து திருடிய நபர்களை தேடினர். அவர்கள் முகமூடி அணிந்திருந்த
நிலையில், அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

