/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச தொழில் பயிற்சி பெண்களுக்கு வாய்ப்பு
/
இலவச தொழில் பயிற்சி பெண்களுக்கு வாய்ப்பு
ADDED : ஆக 25, 2025 03:49 AM
சேலம்: இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில், சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்., 1 முதல், ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில், 18 முதல், 48 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம்.
சிறுதானிய லட்டு, இனிப்பு, கார வகைகள், சத்துமாவு, தோசை கலவை, சிறுதானிய சூப், குக்கீஸ், அல்வா, ஊறுகாய், ஜாம் போன்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். சணல் மூலப்பொருட்களை கொண்டு பல்வேறு வகை பைகள் தயாரிக்கும் தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெறும் முறை, மத்திய அரசின் உதயம் சான்றிதழ், கைவினை கலைஞர் அடையாள அட்டை, வங்கி கடன், மானியம் பெறுதல், திட்ட அறிக்கை தயாரித்தல், தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்தல் போன்ற பயிற்சியும் உண்டு.விரும்பும் பெண்கள், 'இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம், எஸ்.பி., பங்களா பின்புறம், சக்தி நகர், சேலம் - 636 007' என்ற முகவரியில் அணுகலாம். தவிர, 99443 - 92870 என்ற எண்ணில் பேசலாம் என, இந்திய தொழில் முனைவோர் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.