/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளம்பிள்ளையில் அடிக்கடி நடக்கும் மாணவர்கள் மோதல்; மாணவியரை கிண்டல் செய்யும் வாலிபர்களால் அச்சம்
/
இளம்பிள்ளையில் அடிக்கடி நடக்கும் மாணவர்கள் மோதல்; மாணவியரை கிண்டல் செய்யும் வாலிபர்களால் அச்சம்
இளம்பிள்ளையில் அடிக்கடி நடக்கும் மாணவர்கள் மோதல்; மாணவியரை கிண்டல் செய்யும் வாலிபர்களால் அச்சம்
இளம்பிள்ளையில் அடிக்கடி நடக்கும் மாணவர்கள் மோதல்; மாணவியரை கிண்டல் செய்யும் வாலிபர்களால் அச்சம்
ADDED : ஜூலை 11, 2024 12:07 AM
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அரசு பள்ளி மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்-கின்றனர். அ.புதுார் பள்ளி அருகே மாணவியரை கிண்டல் செய்யும் வாலிபர்களின் செயலால் பெற்றோர் அச்சம் அடைந்துள்-ளனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அருகே உள்ள அரசு மாதிரி பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆண்கள் பள்ளி மாண-வர்கள் குழுக்களாக சேர்ந்து, அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்ப-வங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் மாலை, 4:20 மணிக்கு, பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள், நடுவனேரி ஊராட்சி பெருச்சாளி நத்தம் மாரியம்மன் கோவில் அருகே இரு பிரிவினராக பிரிந்து மோதிக்கொண்டனர். அருகே கிடந்த கற்களை எடுத்தும் வீசினர். அங்கிருந்தவர்கள், 'போலீஸ் வருகிறது' என கூற, மாணவர்கள் ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்ததும், பஸ் ஸ்டாப்பில் நின்று மாணவிய-ரிடம் பேசுவதால் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதன்மூலம் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், போலீசார் முறை-யாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்-றனர்.
* மகுடஞ்சாவடி, அ.புதுார் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நி-லைப்பள்ளியில், 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், அரசு மாதிரி பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, காலை, மாலையில் வரும் மாணவர்கள், மாணவியரிடம் கேலி, கிண்டல் செய்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'அ.புதுார் சுற்றுப்பகுதி கிரா-மங்களான கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, ஒண்டிப்பனை, ஏகாபுரம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதி இளைஞர்கள், பைக்குகளில் வந்து மாணவியரிடம் சாக்லெட் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்குகின்றனர். இதனால் மாணவியர் கவனம் சிதறுகிறது. இது-குறித்து தட்டிக்கேட்கும் பெற்றோரை, கத்தியை காட்டி இளை-ஞர்கள் மிரட்டுகின்றனர். இதனால் அச்சமாக உள்ளதால் போலீசார் தீவிர ரோந்து சென்று மாணவியரை பாதுகாக்க, நடவ-டிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.