நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு, பி.டி.ஓ.,கார்த்தி முன்னிலை வகித்தார். அதில் சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., பொதுச்செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், ''எஸ்.கே., அவென்யூவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தெரு விளக்கு கம்பங்கள் அதிக இடைவெளி விட்டு துாரமாக உள்ளது. வீடுகள் உள்ள பகுதியில் இருள் சூழ்ந்துள்ளதால், அடிக்கடி திருட்டு நடக்கிறது. அங்கு கூடுதலாக தெருவிளக்கு கம்பங்கள் அமைக்க வேண்டும்,'' என்றார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக, ஊராட்சி செயலர் விவேகானந்தன் தெரிவித்தார்.

