/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 9 முதல் 12 வரை அனைத்து ஊராட்சிகளில் சிறுதானிய, பாரம்பரிய உணவு திருவிழா போட்டி

ADDED : செப் 06, 2024 07:42 AM
சேலம்: அனைத்து ஊராட்சிகளில் வரும், 9 முதல், 12 வரை, சிறுதானியம், பாரம்பரிய உணவு திருவிழா போட்டி நடக்க உள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: கிராமங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார், முதியோர், போதிய ஊட்டச்சத்து, விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். அதனால் உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், தன் சுத்தம், சுகாதாரம் பேணுதல் திட்டம் மூலம் ரத்தசோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா நடக்க உள்ளது.
மாவட்டத்தில், 385 ஊராட்சிகளில், வரும், 9 முதல், 12 வரை பொது சேவை மைய கட்டடங்களிலும், 20 வட்டார அளவில், வரும், 16 முதல், 20 வரை, வட்டார பொது சேவை கட்டடங்களிலும், மாவட்ட அளவில் வரும், 25ல் கலெக்டர் அலுவலகத்திலும், 3 கட்டங்களாக விழிப்புணர்வு பிரசாரம், பாரம்பரிய உணவு திருவிழா போட்டி நடத்தப்பட உள்ளது.