/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொன்னி நெல் உற்பத்தி பாதியாக சரிவு வைக்கோல் விலையும் சரிந்ததால் விரக்தி
/
பொன்னி நெல் உற்பத்தி பாதியாக சரிவு வைக்கோல் விலையும் சரிந்ததால் விரக்தி
பொன்னி நெல் உற்பத்தி பாதியாக சரிவு வைக்கோல் விலையும் சரிந்ததால் விரக்தி
பொன்னி நெல் உற்பத்தி பாதியாக சரிவு வைக்கோல் விலையும் சரிந்ததால் விரக்தி
ADDED : பிப் 04, 2025 07:03 AM
மேட்டூர்: நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் கால்வாய் பாசன பகுதிகளில் நெல் உற்பத்தி மட்டுமின்றி, வைக்கோல் விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் கடந்த ஜூலை, 30 முதல் கடந்த மாதம், 15 வரை மொத்தம், 9.5 டி.எம்.சி., நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. நீரை பயன்படுத்தி, மேட்டூர் காவிரி கரையோரம் நவப்பட்டி ஊராட்-சியில், 1,187 ஏக்கர், கோல்நாயக்கன்பட்டியில், 954 ஏக்கரில் விவ-சாயிகள்
வெள்ளை பொன்னி ரக நெல் சாகுபடி செய்வர். கடந்த ஆண்டு பாசனத்துக்கு திறந்த நீரின் மூலம்
நவப்பட்டியில், 750 ஏக்கர், கோல்நாயக்கன்பட்டியில், 500 ஏக்கர் நிலத்தில் விவசா-யிகள், 155 நாட்களில் வளரும்
பொன்னி நெல் சாகுபடி செய்-தனர். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம், 75 கிலோ எடை கொண்ட, 30 மூட்டை நெல்
கிடைக்க வேண்டும். ஆனால் நோய் தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விவசாயிகள் ஏக்கருக்கு, 15
முதல், 20 மூட்டை நெல் மட்டுமே அறுவடை செய்துள்ளனர்.
கடந்தாண்டு ஒரு மூட்டை நெல்லை வியாபாரிகள், 2,200 ரூபாய்க்கு கொள்முதல் செய்த நிலையில் தற்போது,
1,700 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு ஒரு கட்டு வைக்கோல், 300 ரூபாய்க்கு கொள்முதல்
செய்த நிலையில் தற்-போது, 270 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். நவப்பட்டி ஊராட்சி, புதுார் விவசாயி
நாகராஜன் கூறுகையில், ''இதுவரை இல்லாத வகையில், நடப்பாண்டு நெல் உற்பத்தி கடுமையாக
குறைந்துள்ளது. அதற்கு நோய் தாக்குதலும் ஒரு காரணம். நெல் கொள்முதல் விலையை வியாபாரிகள்
அதிகரிக்க அரசு நடவ-டிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கொளத்துார் வட்டார வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 'நவப்-பட்டி, கோல்நாயக்கன்பட்டி விவசாயிகள்
பெரும்பாலானோர், வேளாண் துறையில் விதை நெல் வாங்குவதற்கு பதிலாக தனியா-ரிடம் வாங்குகின்றனர்.
மேலும், அறுவடை செய்த நெல்லை சம்-பந்தப்பட்ட விதை நெல் வழங்கிய வியாபாரிகளுக்கே விற்பனை
செய்கின்றனர். வேளாண்துறை விதை நெல்லில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப உற்பத்தி
அதிகரிக்கும். தனி-யாரிடம் வாங்கிய விதை நெல்லால் உற்பத்தி குறைந்திருக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

