ADDED : பிப் 17, 2025 02:18 AM
சேலம்,: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான், சேலத்தில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட விற்பனை அலுவலர் திருமலாரெட்டி தொடங்கி வைத்தார். குரங்குச் சாவடியில் தொடங்கிய வாக்-கத்தான், 5 ரோடு வழியே வந்து, ஜங்ஷன் பிரதான சாலையில் நிறைவு பெற்றது.
சமையல் எரிவாயு வினியோகஸ்தர்கள், வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகிக்கும் ஊழியர்கள், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, தரமான அடுப்பு, டியூப் பயன்படுத்த வேண்டும்; 5 ஆண்டுக்கு ஒருமுறை டியூபை மாற்ற வேண்டும்; அதன்மூலம், 15 சதவீத எரிபொருளை சேமிக்க முடியும்; இரவில் காஸ் இணைப்பை மூடி வைப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுகுறித்து திருமலாரெட்டி கூறுகையில், ''வாக்கத்தான் நோக்-கமே, எரிபொருளை சிக்கனமாக, பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது தான்,'' என்றார்.

