நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் /:வழிப்பறி வழிக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம், கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 25, இவர் மீது அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று வினோத்குமாரை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.