/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொள்ளை வழக்கில் தலைமறைவு ரவுடி 20 ஆண்டுக்கு பின் கைது
/
கொள்ளை வழக்கில் தலைமறைவு ரவுடி 20 ஆண்டுக்கு பின் கைது
கொள்ளை வழக்கில் தலைமறைவு ரவுடி 20 ஆண்டுக்கு பின் கைது
கொள்ளை வழக்கில் தலைமறைவு ரவுடி 20 ஆண்டுக்கு பின் கைது
ADDED : ஜூலை 18, 2025 01:24 AM
மேட்டூர்,கொள்ளை வழக்கில், தலைமறைவான ரவுடியை கருமலைக்கூடல் போலீசார், 20 ஆண்டுக்கு பின் கைது செய்தனர்.
மேட்டூர், கருமலைக்கூடல், ஜீவாநகரை சேர்ந்திவர் ஜீவா, 50. கடந்த, 2005ம் ஆண்டு மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி மளிகை வியாபாரி சுப்ரமணியனை, ஜீவா, அவரது கும்பலை சேர்ந்த சிலர் தாக்கி பணம் பறித்து சென்றனர். இது தொடர்பாக ஜீவாவை, கருமலைக்கூடல் போலீசார் கைது செய்தனர். பின்பு சிறைக்கு சென்று ஜாமினில் வெளிவந்த ஜீவா தலைமறைவானார். இந்நிலையில் கடந்த, 2024 நவ.,28ல் மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2ல், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த கரிச்சிபாளையத்தில் ஜீவா தலைமறைவாக இருந்து கூலி வேலை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் பிரபா உத்தரவுபடி, எஸ்.ஐ., சீனிவாசன் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு பதுங்கி இருந்த ஜீவாவை, 20 ஆண்டுக்கு பின் நேற்று காலை கைது செய்தனர்.