ADDED : டிச 01, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி, முயல் நகரில் முழு நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்து பேசியதாவது:கொண்டப்பநாயக்கன்பட்டி முழு நேர ரேஷன்கடையில் இருந்து பிரித்து முயல் நகர் முழு நேர ரேஷன் கடையில், 713 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இதன்மூலம், 2,267 நுகர்வோர் பயன்பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

