/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்
/
விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்
ADDED : ஜூலை 31, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேச்சேரி அடுத்த, 5வது மைல் விவசாயி பழனிசாமி, 55. கடந்த, 28 அதிகாலை, மேச்சேரி - ஓமலுார் நெடுஞ்சாலையோரம் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு பால் கொண்டு சென்றபோது, ஆம்னி வேன் மோதி பலியானார். இதனால் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், மேச்சேரி - ஓமலுார் சாலையில் வேகத்தடை அமைக்க, அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பழனிசாமி மனைவி லட்சுமி, அவரது குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு நிதி, 25,000 ரூபாய்க்கான காசோலையை, ஆவின் பொதுமேலாளர் சாந்தகுமார் வழங்கினார். ஆவின் மேட்டூர் முதுநிலை ஆய்வாளர் விஜய், சங்க செயலர் கோபாலகிருஷ்ணன்
உடனிருந்தனர்.