/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
ADDED : அக் 11, 2024 07:06 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் நேற்று, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரிகளுக்கு வரும் நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்தது.
குறிப்பாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் 2ம் நாளாக நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணியருக்கு, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேநேரம் ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் தலைமையில் வனத்துறையினர், முட்டல் ஏரி, ஆணைவாரி, பட்டிமேடு உள்ளிட்ட பாதைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.