/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் ரசாயன கலவை என தெரிந்தால் பறிமுதல்
/
சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் ரசாயன கலவை என தெரிந்தால் பறிமுதல்
சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் ரசாயன கலவை என தெரிந்தால் பறிமுதல்
சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் ரசாயன கலவை என தெரிந்தால் பறிமுதல்
ADDED : ஆக 11, 2025 08:22 AM
சேலம்: வரும், 27ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி, திருமலைகிரி, எஸ்.கொல்லப்பட்டி, அம்மா பேட்டை, உடையாப்பட்டி, 2ம் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சிலை தயாரிப்பு பணி நடக்கிறது. மாவட்டத்தில் தேவூர், முத்துநாயக்கன்பட்டி, தம்மம்பட்டி, ஆத்துார், ஜலகண்டாபுரம், மல்லுார் உள்பட, 11 ஊர்களில், தொழிலாளர்கள், சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக களிமண், காகித கூழ், தேங்காய் நார் கூழ், வைக்கோல் போன்று, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் மட்டும் சிலைகள் தயாரிக்க, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி கூறுகையில், ''சுற்றுச்சூழல் அலுவலர்கள் அடங்கிய குழுவினர், சோதனையில் ஈடுபடும்போது தடை செய்யப்பட்ட பொருட்களால் ஆன சிலைகள் இருப்பது கண்டுபிடித்தால் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் கூறுகையில், ''சிலைகள், 10 அடி உயரத்துக்குள் இருக்க வேண்டும். ஆர்.டி.ஓ., ஒப்புதல் பெறுதல் உள்பட உயர்நீதிமன்ற நிபந்தனைகளின்படி அனுமதிக்கப்படும். குறிப்பாக கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அதே எண்ணிக்கைக்கு தான், இப்போதும் அனுமதி உண்டு. புது இடத்தில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை,'' என்றார்.