ADDED : அக் 30, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலத்தில், 2023 செப்., 11ல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், 5 ரோடு அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ரெட்டியூர் சாலையில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த,
மூணாங்கரட்டை சேர்ந்த இளையராஜா, 35, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 1.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு சேலம் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இளையராஜாவுக்கு ஒரு மாத சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

