/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சமலை கரியபெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
கஞ்சமலை கரியபெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
கஞ்சமலை கரியபெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
கஞ்சமலை கரியபெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : செப் 20, 2024 01:47 AM
கஞ்சமலை கரியபெருமாள் கோவில்
கும்பாபிேஷகம் கோலாகலம்
வீரபாண்டி, செப். 20-
சேலம் அருகே கஞ்சமலை உச்சியில் பழமையான கரியபெருமாள் கோவில் உள்ளது. அங்கு செல்ல படிக்கட்டு வசதி இல்லாததால் மலையேற்றம் மூலம் தான் சென்று வர முடியும். முறையான பராமரிப்பின்றி கடந்தாண்டு கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 6 மாதங்களாக மலை அடிவார பக்தர்கள், கோவிலை மறுபடியும் கட்டி மராமத்து பணி செய்தனர். புனரமைப்பு பணி, 10 நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.
புரட்டாசி பிறப்பன்று பாலாலயம் செய்து பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கரியபெருமாள் கோவில் கும்பாபி ேஷக பூஜை தொடங்கியது. யாக பூஜை செய்து, 6:00 மணிக்கு கரியபெருமாள் கோவில் கோபுர கலசத்தில், பக்தர்களின், 'கோவிந்தா' கோஷம் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு புனிதநீரால் அபிேஷகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியோர் அனுமதிக்கப்படவில்லை. பட்டாச்சாரியார்கள், ஊர்மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். நாளை புரட்டாசி முதல் சனியால், இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்க உள்ளது.