/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை இலவச மருத்துவ முகாம் ஜெம் மருத்துவமனை ஏற்பாடு
/
நாளை இலவச மருத்துவ முகாம் ஜெம் மருத்துவமனை ஏற்பாடு
நாளை இலவச மருத்துவ முகாம் ஜெம் மருத்துவமனை ஏற்பாடு
நாளை இலவச மருத்துவ முகாம் ஜெம் மருத்துவமனை ஏற்பாடு
ADDED : ஜன 04, 2025 02:50 AM
இடைப்பாடி, ஜன. 4-
கோவை ஜெம் மருத்துவமனை, இடைப்பாடி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, இலவச மருத்துவ முகாமை, இடைப்பாடி, வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நாளை காலை, 9:00 முதல், 1:00 மணி வரை நடத்துகிறது. ஜெம் மருத்துவமனை மருத்துவர் ஆனந்த விஜய் முன்னிலையில் முகாம் நடக்கும்.
ஜீரண மண்டல லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்ட ஜெம் மருத்துவமனை மருத்துவ குழுவினர், ஆலோசனை வழங்குவர். அதில் வயிற்றில் உள்ள புற்று நோய்களான உணவு குழாய், கல்லீரல், கணையம், மலக்குடல் இரைப்பை மற்றும் குடல் இறக்கம், பித்தப்பை கற்கள், உடல் பருமன் குறைத்தல், வயிற்றுப்புண் கர்ப்பப்பை கோளாறுகள், சினைப்பை உள்ளிட்ட நோய்களுக்கு இலவச ஆலோசனை, சிகிச்சை அளிக்கப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஸ்கேன், எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம், இலவசமாக செய்யப்படும். பரிசோதனை செய்ய விரும்புவோர், காலை உணவு அருந்தாமல் வர வேண்டும். அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, 50 சதவீத சிறப்பு சலுகை வழங்கப்படும். முன்பதிவுக்கு, 73589 10515 என்ற எண்ணில் அழைக்கவும்.