/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 24, 2025 04:01 AM
சேலம்: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணர்திறன் அமைப்பு மூலம், பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கி, சமூகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
சேலம் மாநகர சூரியன் எப்.எம்.,ல் பணிபுரியும் பெண் ரேடியோ ஜாக்கிகள், மாணவர்கள் இடையே, தொழில் வளர்ச்சியில் பெண்கள், பாலின வேறுபாடு சார்ந்து கலந்துரையாடினர். சமூகத்தில் திறம்பட செயலாற்றி கோலோச்சி வரும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பல்வேறு அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய பலகை திறந்து வைக்கப்பட்டது.
துறை சார்பில் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவியருக்கு, அன்னபூரணி உதவித்தொகை வழங்கப்பட்டது. துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. துறையின் பாலின உணர்திறன் அமைப்பின் தலைவர் தமிழ்சுடர் உள்பட பலர் பங்கேற்றனர்.

