/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமி மாயமான வழக்கு மோப்ப நாய் சோதனை
/
சிறுமி மாயமான வழக்கு மோப்ப நாய் சோதனை
ADDED : ஆக 02, 2025 01:07 AM
சங்ககிரி, சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளா
கவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 27. இவரது மனைவி மீனா. இவர்களது பெண் குழந்தை கவிஷா, 4. வினோபாஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த, 30 அன்று புறப்பட்ட அவர் மாயமானார்.
ராஜா நேற்று முன்தினம் அளித்த புகார்படி, தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று, 'லில்லி' எனும் மோப்ப நாயை வரவழைத்து, சிறுமியின் உடையை நுகர செய்தனர். பின் நாய், அங்கன்வாடி மையம் உள்ள திசைக்கு எதிர் திசையில், 50 மீ., சென்று, பின் திரும்பி அங்கன்வாடி மைய பகுதிக்கு வந்து வட்டம் அடித்து நின்று விட்டது. இந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தொடர்ந்து போலீசார் தேடுகின்றனர்.

