நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:தாரமங்கலம்,
சங்ககிரி சாலையில், பிள்ளையார் கோவில் அருகே சத்தியமூர்த்தி, 37
என்பவர், விவசாயம் செய்கிறார். அத்துடன் ஆடுகளை வளர்க்கிறார்.
நேற்று, வீடு முன் கட்டியிருந்த ஆடுகளை, அங்கு சுற்றித்திரிந்த
தெருநாய்கள் கடித்ததில் ஒரு ஆடு பலியானது.அதேபோல் அங்குள்ள
பெட்ரோல் பங்க் பின்புறம், கண்ணன் என்பவர் வளர்ந்து வந்த ஒரு ஆட்டை
கடந்த, 5ல் தெரு நாய் கடித்ததில் பலியானது. இதனால் தெரு நாய்களை
பிடிக்க நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள்
கோரிக்கை விடுத்தனர்.

