/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
/
புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
ADDED : செப் 22, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு வழக்கமாக, 3,000 முதல், 5,000 ஆடுகள் வரை கொண்டுவரப்படும். ஆனால் புரட்டாசி மாதத்தால், நேற்று கூடிய சந்தைக்கு, 2,200 ஆடுகளை மட்டுமே விவசாயிகள், வியாபாரிகள் கொண்டுவந்தனர்.
அதற்கேற்ப கடந்த வாரம், 10 கிலோ வெளளாடு, 7,550 முதல், 8,450 ரூபாய் வரை விற்றது, இந்த வாரம், 7,050 முதல், 7,950 ரூபாய் வரை விலைபோனது. மேலும் சந்தையில், 2.10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.