/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெண்ணந்துார் பகுதியில் தொடரும் ஆடு திருட்டு
/
வெண்ணந்துார் பகுதியில் தொடரும் ஆடு திருட்டு
ADDED : ஜூன் 13, 2025 01:50 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் சுற்று வட்டார பகுதிகளில், தொடர்ந்து ஆடுகள் திருடப்பட்டு வருவதால், கால்நடைகள் வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.சவுதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி பகுதிகளில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாகும். இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் உலா வரும் மர்ம நபர்கள், விவசாய நிலம் மற்றும் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடு, மாடுகளை திருடி செல்கின்றனர்.
இந்நிலையில், ஓ.சவுதாபுரம் பஞ்., கல்கட்டானுார் அருகே உள்ள ராசாபாளையத்தை சேர்ந்த விவசாயி செங்கோட்டையன், தனது தோட்டத்தில்ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 7-ம் தேதி இரவு அதிகாலை, மர்ம நபர்கள் இருவர் ஆடுகளை திருடி செல்ல முயன்றனர். அப்போது செங்கோட்டையன் விழித்துக் கொள்ளவே, இரண்டு ஆடுகளில் ஒன்றை மர்ம நபர்கள் டூவீலரில் திருடி சென்றனர். இதுகுறித்து, செங்கோட்டையன் வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார்.