நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி பனமரத்துப்பட்டி ஏரி அருகே ஆத்து புதுாரை சேர்ந்தவர் சிவாஜி. நேற்று முன்தினம் அவரது ஆடுகளை, ஏரி அடிக்கரை பகுதியில் மேய்ச்சலில் விட்டுள்ளார். அங்கு மதியம், 3:00 மணிக்கு, 'பல்சர்' பைக்கில் வந்த இருவர், ஒரு ஆட்டை துாக்கி சென்றனர்.
இதுகுறித்து சிவாஜி புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்ததில், ஆடு திருடியது, திப்பம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், 26, விமல், 23, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டை மீட்டு, பைக்கை பறிமுதல் செய்தனர்.