/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணை கொன்ற ஆடு வியாபாரி கைது பலாத்காரம் செய்ய முயன்றது அம்பலம்
/
பெண்ணை கொன்ற ஆடு வியாபாரி கைது பலாத்காரம் செய்ய முயன்றது அம்பலம்
பெண்ணை கொன்ற ஆடு வியாபாரி கைது பலாத்காரம் செய்ய முயன்றது அம்பலம்
பெண்ணை கொன்ற ஆடு வியாபாரி கைது பலாத்காரம் செய்ய முயன்றது அம்பலம்
ADDED : ஏப் 24, 2025 01:13 AM
இடைப்பாடி:
இடைப்பாடி அருகே வாழக்குட்டை, மோட்டூரை சேர்ந்தவர் மாதையன், 52. ஆடு வியாபாரி. இவரது மனைவி சின்னபொண்ணு, 46. கடந்த, 21 இரவு, பேத்தியுடன் துாங்கிக்கொண்டிருந்த சின்னுபொண்ணு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. வீட்டுக்கு வெளியே சிறிது துாரத்தில் சின்னபொண்ணுவின் கண்ணாடி வளையல் துண்டுகள், அவரது மொபைல் போன் இருந்தன. கொங்கணாபுரம் போலீசார் விசாரித்து, பக்கத்து வீட்டுக்காரரான ஆடு வியாபாரி காவேரி, 43, என்பவரை பிடித்து விசாரித்தபோது, சின்னபொண்ணுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நேற்று அவரை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சின்னபொண்ணு வீட்டில், சம்பவத்தன்று யாரும் இல்லை. அதேபோல் அன்று காவேரி வீட்டிலும் யாரும் இல்லை. இந்நிலையில் சின்னபொண்ணு வீடு முன் துாங்கிக்கொண்டிருந்த மாதையனின் அண்ணன் வெங்கடாசலத்திடம், 'குடிக்கலாம் வா' என கூறி, காவேரி பைக்கில் அழைத்துச்சென்று கொங்கணாபுரத்திலேயே விட்டுவிட்டு வந்துள்ளார்.
பின் இங்கு வீட்டில் தனியே இருந்த சின்னபொண்ணுவை பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்பித்து வீட்டின் வெளியே வந்தார். அப்போது விரட்டிச்சென்ற காவேரி, பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது பெண்ணின் கண்ணாடி வளையல்கள் உடைந்து விழுந்தன. மொபைலும் விழுந்தது. 'உன் மனைவியிடம் கூறுகிறேன்' என சின்னபொண்ணு கூறியதால் ஆத்திரமடைந்த காவேரி, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

