ADDED : ஆக 10, 2025 02:27 AM
இடைப்பாடி, கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு நேற்று ஏராளமானோர், 3,400 ஆடுகளை கொண்டுவந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 9,500 முதல், 10,100 ரூபாய்; செம்மறியாடு 8,800 முதல், 9,100 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.85 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரம், 3,175 ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த வாரம், 225 ஆடுகள் வரத்து அதிகரித்தது. அதற்கு, இடைப்பாடி, அதன் சுற்றுப்பகுதிகளில் அடுத்த வாரம் ஆடி பண்டிகை நடக்கவுள்ளதே காரணம் என, விவசாயி கள் தெரிவித்தனர்.
பருத்தி, எள் ஏலம்கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. 5,500 மூட்டை களை, விவசாயிகள் கொண்டு வந்தனர். பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை 7,500 முதல், 8,489 ரூபாய்; கொட்டு ரகம் மூட்டை, 4,650 முதல், 6,350 ரூபாய்; சுரபி ரகம், 8,900 முதல், 10,266 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.65 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. மேலும் எள் ஏலத்துக்கு, 10 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. வெள்ளை எள் கிலோ, 86 முதல், 112 ரூபாய் வரை விற்பனையானது. அதன்படி, 2 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.

