ADDED : ஜன 26, 2025 03:53 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தை நேற்று கூடி-யது. 3,900 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ ஆடு, 7,450 முதல், 8,050 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.90 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம், 150 ஆடுகள் வரத்து அதிகரித்திருந்-தது.
பருத்தி விலை உயர்வுகொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 2,500 மூட்டைகளை கொண்டு வந்தனர். அதில், 100 கிலோ மூட்டை, பி.டி., ரகம், 7,200 முதல், 8,200 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 9,700 முதல், 11,500; கொட்டு ரகம், 4,000 முதல், 5,800 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதில் மூட்டைக்கு, பி.டி., - கொட்டு ரகங்கள், தலா, 400 ரூபாய், டி.சி.எச்., ரகம், 231 ரூபாய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

