/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச பாரா த்ரோபாலில் தங்கம்; 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு
/
சர்வதேச பாரா த்ரோபாலில் தங்கம்; 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு
சர்வதேச பாரா த்ரோபாலில் தங்கம்; 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு
சர்வதேச பாரா த்ரோபாலில் தங்கம்; 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு
ADDED : டிச 11, 2024 07:16 AM
தாரமங்கலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மேல் சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 21, சின்னப்பம்பட்டி, எல்லானுாரை சேர்ந்தவர் தமிழரசன், 19. மாற்றுத்திறனாளிகளான இருவர் உள்பட, 7 பேர், கம்போடியாவில் நடந்த சர்வதேச பாரா த்ரோபால் போட்டியில், இந்தியா சார்பில் விளையாடினர். தேசிய கம்போடியா பாராலிம்பிக் சங்கம் நடத்திய, இப்போட்டியில் கம்போடியாவுக்கு எதிராக மோதி, தங்கம் வென்றனர். இந்நிலையில் தினேஷ்குமார், தமிழரசன், நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பினர்.
நேற்று, தாரமங்கலம் தி.மு.க.,வின் மேற்கு ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அதில் இருவருக்கும், கட்சியினர், மக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். அதேபோல் பயிற்சியாளர் சஞ்சய் கண்ணாவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
'அமைச்சர் உதவ வேண்டும்'
இதுகுறித்து தினேஷ்குமார் கூறுகையில், ''கம்போடியா சென்று விளையாட, சேலம் எம்.பி., செல்வகணபதி, ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், சேட்டு உள்பட பலர் உதவி செய்தனர். அங்கு வெற்றி பெற்றதால், மார்ச்சில் தாய்லாந்தில் நடக்க உள்ள ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம். அங்கு செல்ல, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, அரசு சார்பில் உதவி செய்தால் நன்றாக இருக்கும்,'' என்றார்.

