/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாரா விளையாட்டில் தங்கம் சேலம் வீரருக்கு வரவேற்பு
/
பாரா விளையாட்டில் தங்கம் சேலம் வீரருக்கு வரவேற்பு
ADDED : நவ 26, 2025 01:52 AM
சேலம், தாய்லாந்தில், சர்வதேச திறன் பாரா விளையாட்டு போட்டி கடந்த, 17 முதல், 24 வரை நடந்தது. அதில் சேலத்தை சேர்ந்த வீரர் சஞ்சய்கண்ணா, 28, வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளி வென்றார்.
அவர் நேற்று, ரயில் மூலம் சேலம் வந்தார். அவருக்கு, ரயில்வே ஸ்டேஷனில் மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நாமக் கல் கபடி கழக செயலர் தேவாரம், ஆவின் முன்னாள் மேலாளர் சிவலிங்கம், போலீஸ் கபடி முன்னாள் வீரர்
கென்னடி உள்ளிட்டோர், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு விளையாட்டு சங்க நிர்வாகிகளும் வாழ்த்தினர்.
மேலும் இப்போட்டியில், சேலத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட வீரர்கள் வெற்றி பெற்று சேலம் திரும்பினர். அவர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, சஞ்சய் கண்ணாவின் தந்தை கண்ணன் செய்திருந்தார்.

