/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் பதவி ஏற்பு

ADDED : நவ 26, 2025 01:52 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், தலைவர் உள்பட, தி.மு.க.,வில், 11 கவுன்சிலர், அ.தி.மு.க.,வில், 4 கவுன்சிலர் உள்ளனர். அங்கு கவுன்சிலர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவி பரமேஸ்வரி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். அதில், 11வது வார்டு, தி.மு.க., செயலரான பன்னீர்செல்வத்தின் மகள் கவுசல்யா, 25, மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பதவி ஏற்றார்.
அதேபோல் மல்லுார் டவுன் பஞ்சாயத்தில், செயல் அலுவலர் ரேவதி முன்னிலையில், தி.மு.க., உறுப்பினர் மணிகண்டன், 29, மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பொறுப்பேற்றார். துணைத்தலைவர் அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.