/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்டத்தில் சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு
/
சேலம் மாவட்டத்தில் சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு
ADDED : நவ 26, 2025 01:52 AM
சேலம், தமிழக
சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம், சேலம் கலெக்டர்
அலுவலகத்தில் நேற்று நடந்தது. குழு உறுப்பினர்களான,
எம்.எல்.ஏ.,.க்கள் சரஸ்வதி, அப்துல் சமது முன்னிலை வகித்தனர்.
கணக்கு குழு தலைவரான, எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை தலைமை வகித்து பேசியதாவது:
சேலம்
மாவட்டத்தில் மூக்கனேரி புனரமைப்பு, மரவனேரி அரசினர் கல்லுாரி
மாணவர் விடுதி, அரசு மருத்துவ கல்லுாரி புற்றுநோய் கதிரியக்க
சிகிச்சை மையம், கீரைப்பாப்பம்பாடி ஏரி உள்ளிட்ட பகுதிகளை
பார்வையிட்டு, திட்டங்கள் முறையாக மக்களுக்கு பயனளிக்கும்படி
செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தோம். இதுதொடர்பாக
கலெக்டர், உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
முதன்மை
செயலர் சீனிவாசன், கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர்
ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.

