ADDED : நவ 09, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். சேலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு, 1,320 ரூபாய் விலை சரிந்தது. ஆனால் நேற்று கிரா-முக்கு, 100 உயர்ந்து, 7,225 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் பவுனுக்கு, 800 ரூபாய் உயர்ந்து, 57,800 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு, 1.50 உயர்ந்து, 100 ரூபாயாகவும், பார் வெள்ளி, 1,500 உயர்ந்து, 1,00,000 ரூபாயாகவும் விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், இனி வட்டி குறைக்கப்படலாம் என்ற கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரிப்பால் விலை உயர்ந்தது' என்றனர்.