/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் ஒரு வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.1,880 உயர்வு
/
சேலத்தில் ஒரு வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.1,880 உயர்வு
சேலத்தில் ஒரு வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.1,880 உயர்வு
சேலத்தில் ஒரு வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.1,880 உயர்வு
ADDED : ஏப் 02, 2024 04:14 AM
சேலம்: சேலத்தில், ஒரு வாரத்தில் தங்கம் பவுனுக்கு, 1,880 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கம் வாங்க விரும்பும் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். எப்போது தங்கம் விலை குறையும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகமாக்குவதால், தற்போது விலை குறைவதற்கான வாய்ப்பு குறைவு என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த, 25ம் தேதி தங்கம் கிராம், 6,125 ரூபாய், பவுன், 49 ஆயிரம் ரூபாய், வெள்ளி கிராம், 79.80, பார் வெள்ளி, 79,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் கிராம், 6,360 ரூபாய், பவுன், 50,880 ரூபாய், வெள்ளி கிராம், 80.60, பார் வெள்ளி, 80,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் கிராமிற்கு, 235 ரூபாய் உயர்ந்து, 6,360, பவுன், 1,880 ரூபாய் உயர்ந்து, 50,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமிற்கு, 80 காசு உயர்ந்து, 80.60, பார் வெள்ளி, 800 ரூபாய் உயர்ந்து, 80,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

