ADDED : டிச 04, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி, பாலக்காடு மலைக்கிராமத்தில், ரேஷன் கடை உள்ளது. அங்கு, 237 கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஆனால் மழையால், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்த கடையின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகி வருகிறது.
இதில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. நேற்று, பச்சமலை மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள், சேதம் அடையாமல் இருந்த பொருட்களை வெளியே எடுத்து, அவற்றை மக்களுக்கு வினியோகம் செய்தனர். மேலும் கடையை விரைந்து சீரமைக்க, மக்கள் வலியுறுத்தினர்.