/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் மீது அரசு பஸ் மோதல்; எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ., படுகாயம்
/
பைக் மீது அரசு பஸ் மோதல்; எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ., படுகாயம்
பைக் மீது அரசு பஸ் மோதல்; எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ., படுகாயம்
பைக் மீது அரசு பஸ் மோதல்; எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ., படுகாயம்
ADDED : பிப் 03, 2025 07:17 AM
தலைவாசல்: ஆத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜெயசூர்யா, 27, எஸ்.எஸ்.ஐ., கருணாகரன், 55. இவர்கள், நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஆத்துாரில் இருந்து, தலைவாசல் நோக்கி, 'ேஹாண்டா' பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். ஜெயசூர்யா ஓட்டினார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.
சம்பேரி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, ஆத்துாரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச்சென்ற, விழுப்புரம் கோட்ட அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், ஜெயசூர்யா, கருணாகரன் ஆகியோருக்கு முகம், உடல் பகுதிகளில் அதிகளவில் காயங்கள் ஏற்பட்டன. அவர்களை, மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு இருவரையும், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பார்த்து, ஆறுதல் கூறினார். தலைவாசல் போலீசார், அரசு பஸ் தற்காலிக டிரைவர் கணேசன், 25, மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஆத்துார் அரசு கல்லுாரி முதல்வர் செல்வராஜ்(பொ) வீட்டில், 51 பவுன், ஒரு லட்சம் ரூபாய் திருடுபோன வழக்கு தொடர்பாக விசாரிக்க சென்றபோது, விபத்து நேர்ந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.