/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பஸ் மோதி விபத்து; சிறுமி பலி; தந்தை காயம்
/
அரசு பஸ் மோதி விபத்து; சிறுமி பலி; தந்தை காயம்
ADDED : அக் 13, 2025 11:35 PM
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம், எட்டிகுட்டை தெருவை சேர்ந்தவர் தங்கராஜ், 36. இவரது மகள் ஜனாஸ்ரீ, 4. வலிப்பு நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை, 11:30 மணிக்கு தங்கராஜ், ஜனாஸ்ரீயுடன், குரங்குசாவடியில் மருந்து வாங்க சென்றார்.
குரங்குசாவடி ரவுண்டானா சிக்னல் அருகே, மதுரையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ் பயணியரை இறக்கி விட்டு, மீண்டும் புறப்பட்டது. அந்த நேரத்தில் அவ்வழியாக சாலையை கடக்க முயன்ற தங்கராஜ், ஜனாஸ்ரீ மீது பஸ் மோதியதில் ஜனாஸ்ரீ பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். தங்கராஜுக்கு இரண்டு கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது.
சூரமங்கலம் போலீசார், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் சுதன், 27, என்பவரை கைது செய்தனர்.