sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிலவரி செய்திகள்.. : சேலம்

/

சிலவரி செய்திகள்.. : சேலம்

சிலவரி செய்திகள்.. : சேலம்

சிலவரி செய்திகள்.. : சேலம்


ADDED : அக் 13, 2025 03:37 AM

Google News

ADDED : அக் 13, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போர்டிகோ' இடிந்து

2 சிறுவர் படுகாயம்

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகரில், 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. முறையான பராமரிப்பின்றி, அந்த கட்டடங்கள் சிதிலமாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு, முதல் தளத்தின் முன்புற 'போர்டிகோ' தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பில் வசிக்கும் ரகுமான் மகன் சலா, 16, ராஜீவ் காந்தி மகன் ராகுல், 19, ஆகியோருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

'ஹரிதாச வைபவம்'இன்னிசை நிகழ்ச்சி

சேலம்: சேலம், சின்ன திருப்பதி ராகவேந்திர சுவாமிகள் மடத்தில், சங்கீத சகோதரர்களான மேட்டூர் பிரதர்ஸ் சஞ்சீவி, முரளி ஏற்பாட்டில், 'ஹரிதாச வைபவம்' எனும், 2 நாள் இன்னிசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

அதில் சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் சங்கரராமன் தலைமையில் குழுவினரின், கச்சேரி நடந்தது. இதில் சேலம் மட்டுமன்றி பல்வேறு ஊர்களில் இருந்து, கர்நாடக சங்கீத பாடகர்கள், இசை கலைஞர்கள் என ஏராளமானோர், கச்சேரி நடத்தி பக்தர்களை மகிழ்வித்தனர்.

தொடர்ந்து, 2ம் நாளான நேற்று, சுதா பரிமளா பஜனா மண்டலி குழுவினரின் கச்சேரி நடந்தது. மாலை வரை பல்வேறு பாகவதர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பின் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மூதாட்டியை தாக்கியவாலிபர் கைது

சேலம்: சேலம், பச்சப்பட்டியை சேர்ந்த, கரீம் மனைவி ஷகிலா, 55. இவர், 6 மாதங்களுக்கு முன், டவுன் முகமது புறா பகுதியை சேர்ந்த முகமது அலிசுகேல், 36, என்பவரிடம், கடன் வாங்கியிருந்தார்.

இதுதொடர்பான கொடுக்கல் வாங்கலில், நேற்று முன்தினம் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முகமது அலி சுகேல், அவரது தாய் ஆயிஷா ஆகியோர், ஷகிலாவை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, டவுன் போலீசார் விசாரித்து, முகமது அலி சுகேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us