ADDED : அக் 30, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமாயி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் செல்வம் பேசினார். அதில், தி.மு.க., அரசின் தேர்தல் கால வாக்குறுதி எண்: 309ன் படி அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்தல்; கடந்த ஜூலை, 1 முதல், மத்திய அரசு அறிவித்ததை போன்று, 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்குதல் என்பன உள்பட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழக அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் உமர் பாரூக், பொருளாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

