/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு ஊழியர்கள் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2024 03:15 AM
சேலம்: கோல்கட்டா மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் மருத்து-வமனையில் இரவு பணியில் இருந்த முதுகலை மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்-புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதி-யாக, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்குவங்க அரசை கண்டித்தும், உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட தலைவர் திருவரங்கம் தலைமையில், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம், நிர்வாகிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சங்க மாநிலத் துணைத்தலைவர் சுப்பிரமணியம் உட்-பட பலர் கலந்து கொண்டனர்.