/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் சூழ்ந்ததால் அரசு பள்ளிக்கு விடுமுறை
/
மழைநீர் சூழ்ந்ததால் அரசு பள்ளிக்கு விடுமுறை
ADDED : டிச 05, 2024 07:40 AM
இடைப்பாடி: ஏற்காட்டில் பெய்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்-பெருக்கு ஏற்பட்டது. இதனால் இடைப்பாடி அருகே, குள்ளம்பட்-டியில் உள்ள ஆத்துக்காடு, அம்மன்கோவில், கந்தாயிகாடு, தைலாங்காடு, வயக்காடு ஆகிய
இடங்களில் உள்ள தரைப்பா-லங்கள் மூழ்கின.இதனால் அந்த பாலங்களை கடந்து நகர் பகுதிகளுக்கு வரும் கிராமங்களான மலைமாரியம்மன் கோவில்
உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களின் போக்குவரத்து தடையால், அவர்களது இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி வருவாய்த்துறையினர், தேவூர் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு,
மாற்றுப்பா-தையில் மக்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். அதேபோல் செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நேற்று
அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அங்கு, சங்ககிரி மாவட்ட கல்வி அலு-வலர் பெருமாள் ஆய்வு
செய்தார். செட்டிப்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் செட்டிப்பட்டி,
குள்ளம்பட்டி, ஆத்-துக்காடு, மயிலாடி, கப்பரையான் காடு, மோலானி முனியப்பன் கோவில்,
வெள்ளக்கல்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதி-களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு,
வாழை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுகுறித்து சங்ககிரி வேளாண் அலுவலர் கனிமொழி, தேவூர்
வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பார்வையிட்டு, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.