/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளி மாணவியர் மாநில கபடிக்கு தேர்வு
/
அரசு பள்ளி மாணவியர் மாநில கபடிக்கு தேர்வு
ADDED : அக் 17, 2025 02:16 AM
கெங்கவல்லி,சேலம் மாவட்ட அளவில் கபடி போட்டி, வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. 20 ஒன்றியங்களை சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அதில் தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர் மாலினி, ரிதன்யா, அன்புசெல்வி, காவியா, தமிழரசி, ஜெயாஷினி, அபிஸ்ரீ, விமோனிஷா, தன்சிகா, சிவரஞ்சினி, சுஜித்ரா, திவ்யஸ்ரீ, சங்கவி ஆகியோர், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், முதலிடம் பிடித்து, மாநில கபடி போட்டிக்கு தேர்வு பெற்றனர். அவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் குருநாதன், மாணவியரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயபால், ரவிசங்கர், உடற்கல்வி இயக்குனர் குமார், உடற்கல்வி ஆசிரியர் எழில்பிரியா உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழுவினர் பங்கேற்றனர்.