/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் 'பில்லர்' அமைக்கும் தனி நபர் ஆக்கிரமிப்பதாக ஹெச்.எம்., புகார்

ADDED : அக் 17, 2025 02:16 AM
ஆத்துார், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு பெரிய அளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. கடந்த, 5ல் பெய்த மழையின்போது, பள்ளியின் பின்புற சுற்றுச்சுவர், 40 மீ.,க்கு இடிந்து விழுந்தது. மேலும், 80 மீ., சுவர் இடியும் நிலையில் உள்ளது.
சுவர் இடிந்த பகுதியில், தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து, கான்கிரீட் பில்லர் அமைத்துள்ளதாக, தலைமை ஆசிரியர் சந்திரசேகர், நேற்று முன்தினம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில், 'இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர் பகுதியில், தனி நபர் ஒருவர், கான்கிரீட் பில்லர் அமைத்து, வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மூலம் கேட்டபோது, 'உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள். நான், அப்படித்தான் கட்டுவேன்' என்கிறார். மைதான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.