/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
/
அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
ADDED : அக் 07, 2025 01:31 AM
ஆத்துார், ஆத்துாரில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
ஆத்துாரில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி பின்புறத்தில், 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் இருந்தது.
பழமையான சுவராக இருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் பெய்த கன மழையில், சுற்றுச்சுவர் அதிகளவில் ஈரப்பதம் ஏற்பட்டது. நேற்று, 120 மீட்டர் துார சுற்றுச்சுவரில், 40 மீட்டர் சுவர் இடிந்து விழுந்தது. மீதம், 80 மீட்டர் சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் பகுதிக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் விழுந்ததால், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சுற்றுச்சுவர் புதிதாக அமைத்து, புதர்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.