/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லேப்டாப் திருடிய 2 பேருக்கு காப்பு
/
லேப்டாப் திருடிய 2 பேருக்கு காப்பு
ADDED : அக் 07, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், தாதகாபட்டி திருச்சி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 40. இவர் பிரபாத் அருகே இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த, 2ல் கடையில் லேப்டாப் வைத்து பணி செய்து கொண்டிருந்தார். பின்னர், உள்ளே சென்று விட்டு வந்து பார்த்தபோது, டேபிளில் லேப்டாப் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, தாதகாபட்டியை சேர்ந்த பிரேம்குமார், 21, ரஞ்சித்குமார், 30, ஆகியோரை கைது செய்தனர்.